Wednesday, January 4, 2012

1



விஜய் தொலைக்காட் சியில் நீயா? நானா? என்ற ஒரு நிகழ்ச்சி. மக்களைக்
கவர்ந்து இழுப்பதாகச் சொல்லப்படுவ துண்டு.

அது எப்படியோ இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும்!

பெரும்பாலும் மக்கள் விரோதமான - மக்கள் வளர்ச்சிக்குக் கேடு பயக்கும்
வகையில்தான் அந்நிகழ்ச்சிகள் அமைகின்றன. தப்பித் தவறி பகுத்தறிவு உணர்
வுக்கோ, விஞ்ஞான சிந்தனைக்கோ இடம் கொடுத்துவிடக்கூடாது என்பதிலே அதன்
ஒருங்கிணைப்பாளர் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

நேற்றிரவு சோதி டத்தைப் பற்றி ஓர் அலசல்! 2012 புத்தாண்டுத்
தொடக்கத்திலேயே முட் டாள்தனத்தை முதலீடாகக் கொண்டு படித்த - படிக்காத
பாமர மக்களைக் கவர்ந்துவிடுவது என்ற முடிவில் முழங்கால் எலும்பு உடைய
குதித்து விட்டார்கள் என்பதே இதன் பொருளா?

இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு வந்திருந்த சோதிடக் கணிப்
புக்காரர்களுக்கிடையே முரண்பாடுகள் - மோதல்கள்!

இராசியை வைத்து சோதிடம் கூறுவது முட் டாள்தனம் - இதுவரை
சொல்லப்பட்டதெல்லாம் தவறு. லக்னத்தை வைத்து தான் சோதிடத்தைக் கணிக்க
வேண்டும் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் - ஒருவர்.

அங்கு கூடியிருந்த அத்தனைப் பேர்களின் (பெரும்பாலும் அம்பி, அம்
மாமிகள்தான்) முகத்திலும் அசடு வழிந்ததுதான் மிச்சம்!

இதே விஜய் தொலைக் காட்சியில் (30-4-1996) சென்னையைச் சேர்ந்த
ராகவேந்திரர் என்ற பிரபல சோதிடர் அவ்வாண்டு மே மாதத்தில் நடைபெற விருந்த
மக்களவைத் தேர்தலில் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங் கிரசுக்கு
அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று சொல்லவில்லையா? மறந்து
விடாதீர்கள். இதே விஜய் டி.வி.யில்தான் இந்தக் கப்சா.

ஆனால் நடந்தது என்ன? அதுவரை நடை பெற்ற தேர்தல்களிலேயே மிகக் குறைந்த
இடங்களைப் பெற்றது காங்கிரஸ்.

விஜய் டி.வி.யோ ராகவேந்திராவோ குறைந்த பட்சம் வருத்தம் தெரிவித்த துண்டா?

ராஜீவ்காந்திதான் தேர்தலில் வெல்லப் போகி றார் என்று ஜோதிடர்கள்
சொன்னார்களே! பரிதாபம், தேர்தலில் போட்டியிடுவ தற்கு முன்பே படு கொலை
செய்யப்பட்டுவிட்டாரே! எவ்வளவு வேதனை!

அந்தச் சோதிடரை இழுத்து வந்து நடு வீதியில் நிற்க வைத்து நாலு
வார்த்தைகள் நாக்கைப் பிடுங்கக் கேட்கவேண்டாமா?

50, 60 ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களின் சராசரி வயது 40-க்கு மேல்
இல்லையே! இப்பொழுது 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதே - ஜோதிடத்தின் பலனாலா?
மருத்துவ அறிவியல் வளர்ச்சியினாலா ?

காந்தியாருக்கு 125 வயது என்று திருத்தணி பிரபல கிருஷ்ணமாச்சாரி
கணித்தாரே - காரியத்தில் நடந்தது என்ன?

ஒரு வினாவிற்கு ஜோதிடர்களோ, விஜய் தொலைக் காட்சி ஒருங் கிணைப்பாளரோ பதில்
சொல்லட்டும்!

(1) சூரியன் கிரகமா? நட்சத்திரமா? நட்சத்திரமான சூரியனை கிரக மாக்கி
ஜோதிடம் சொல்லப் படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? (2) பூமி ஒரு
கிரகம் தானே! நவக்கிரகத்தின் பட்டியலில் பூமி இடம் பெறாதது ஏன்? பூமியின்
துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் கொடுத்து விட்டு, மூலக் கிரகமான
பூமியைச் சேர்க்காதது ஏன்? (3) வானியல் விஞ்ஞானப்படி இராகு, கேது என்று
கிரகங்கள் உண்டா? இல்லாத கிரகங்க ளுக்கு ஜோதிடம் சொல்லுவது ஏமாற்று வேலை
தானே? (இதனை விடக் கடுமையான வார்த்தைகளை நியாயமாக உச் சரிக்க வேண்டும்).

(4) நெப்டியூன், யுரேனஸ் என்று புதிதாகக் கண்டு பிடித்த கிரகங்களுக்கு
ஜோதிடத்தில் என்ன பலன் உண்டு? (5) 30 கி.மீ. வேகத்தில் செல்லும் சந்திரன்
ஒரு ராசியை இரண்டரை நாள் களில் கடக்கிறது. சூரி யனோ நொடிக்கு 230 கி.மீ.
வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடந் திட ஒரு மாதம்
ஆகிறதாம்!

இது என்ன திருக்கூத்து? மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்
என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு கிறது. (51ஏ - உட்பிரிவு - எச்)

இதன்படி விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது
நிறுவனங்கள்மீது - நடவடிக்கை எடுக்க இடம் உண்டா என்பது பற்றிச் சிந்திக்க
வேண்டும்.

1975 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற 19 விஞ்ஞானிகள் ஜோதிடம் பொய் -
அடிப்படை யற்றது என்று கூட்ட றிக்கை வெளியிட்டார்களே. வெகு தூரம் போக
வேண்டாம். தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கட் ராமன் ராமகிருஷ்ணன் என்ற நோபல்
பரிசு பெற்ற விஞ்ஞானி, சோதனைகளுக்கு முன் சோதிடம் நிற்காது என்று மூன்று
நாட்களுக்கு முன்புகூட மண்டையிலடித்த மாதிரி சென்னையிலேயே கூறிவிட்டுச்
சென்றாரே!

அந்த ஈரம் காய்வதற்குள் மக்களின் அறிவையும், தன்னம்பிக்கையையும்,
முயற்சிகளையும் முடக் கும் - மனித குலத்துக்கு மோசமான கேட்டினை விஞ்ஞான
சாதனமான ஒரு தொலைக்காட்சியில் செய்யலாமா?

நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமா?
அல் லது அடிப்படையிலேயே அடிமுட்டாள்தனமா?

சோதிடந்தனை இகழ்! இப்படி பார்ப்பன பாரதியே சொல்லி இருக் கின்றாரே -
சோதிடர் களைத் தூக்கில் போடு என்று ராஜாஜியே கூறியுள்ளாரே, தெரியுமா?